அழைத்தால் வரும் கண்ணன்
டிசம்பர் 15,2008,
09:41  IST
எழுத்தின் அளவு:

காட்டுப்பாதையில் செல்லும் போது கலக்கத்தைப் போக்கிடுவான். பெரும்படையுடன் களத்தில் போர்செய்யும் வேளையில் முன்னின்று என்னைக் காத்திடுவான். உடம்பை மிக வருத்திடும் நோய் வந்து விட்டால் உற்ற மருந்து சொல்வான். நெஞ்சில் கவலை வந்தால் இதமாக தக்கஉபாயம் சொல்லி அருள் செய்வான். அவனே என் செல்லக்கண்ணன்.பிழைக்க வழி கேட்டால், ஒரே பேச்சில் வழி காட்டிடுவான். உழைக்கும் வழி, உண்ணும் வழி காட்டி வாழும் வகை செய்வான். "கண்ணா' என்று கூவி அழைத்தால் சாக்குப்போக்கு சொல்லாமல் அரை வினாடிக்குள் வந்து நிற்பான். பசி நேரத்தில் உணவாக நிற்பவன் கண்ணன். மழைக்குக் குடை போல் காப்பவன் அவன்.
கண்ணனிடம் கேட்டவுடன் பொருள் கிடைக்கும். அவன் தன் ஆட்டத்தினாலும், பாடும் திறத்தாலும் ஆறுதல் அளித்திடுவான். என் மனக்குறிப்பினை நான் சொல்லும் முன்னர் அறிந்திடுவான். என்னிடம் கண்ணனைப் போல் அன்பு செய்பவர் யாருமில்லை. என் உள்ளத்தில் கர்வம் வந்தால் ஓங்கி அடித்திடுவான். நெஞ்சில் கள்ளத்தனம் வந்து ஒரு வார்த்தை சொன்னால் பொங்கி எழுந்திடுவான். கீதை மொழி சொன்ன கண்ணனின் கீர்த்திதனை தினமும் வாழ்த்தி மகிழ்வேன்.

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement