உன் கடமை புனிதமானது
ஏப்ரல் 01,2012,
09:04  IST
எழுத்தின் அளவு:

* கடவுள் மீது அன்பு செலுத்த வேண்டும். அது நமது கடமை என்று எண்ண வேண்டும்.
* வெற்றியில் உனக்கு விருப்பம் இருக்குமானால், வாழ்க்கையில் ஆணவத்தை முற்றிலும் ஒழித்துவிடு.
* வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களுக்கு மத்தியிலும் தெய்வத்தன்மையை மறக்காமல் இருக்க வேண்டும்.
* எந்தச் சூழ்நிலையிலும், எவருடைய குணம் உயர்ந்ததாக இருக்கிறதோ அவனே உண்மையில் சிறந்த மனிதன்.
* நாம் நம்மைப்பற்றி எண்ணாத நேரங்களில் மட்டுமே நன்மையையும், உண்மையான வாழ்க்கையையும் அனுபவிக்கிறோம்.
* இறைவனிடம் அனைத்து இயல்புகளும் இருந்தாலும், அவற்றை மனித இயல்பு மூலமாகத்தான் காண முடியும்.
* நீ செய்யும் கடமை ஒவ்வொன்றும் புனிதமானது. அதை பக்தியுடன் செய்வது மிக உயர்ந்த தெய்வ வழிபாடு.
- விவேகானந்தர்

Advertisement
விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement