நந்தன ஆண்டே நலம் தருக!
ஏப்ரல் 09,2012,
16:04  IST
எழுத்தின் அளவு:

* எங்கும் நிறைந்திருக்கும் இறைவனே! நந்தன புத்தாண்டு பிறந்திருக்கும் இந்த நன்னாளில் உம்மைப் போற்றி வணங்குகிறோம். எப்போதும் மனதில் மகிழ்ச்சி நிலைத்திருக்க அருள்புரிவாயாக.
* அருட்பெருஞ்ஜோதியாய் திகழ்பவனே! ஆரோக்கியமும், மனவலிமையும் குடும்பத்தினர் அனைவரும் பெற்று வாழ வேண்டும். இந்த புதிய ஆண்டில் எங்களின் விருப்பம் அனைத்தும் நிறைவேற வழிகாட்டுவாயாக.
* கருணையே வடிவானவனே! செய்யும் தொழில், வியாபாரம், பணியில் வளர்ச்சி பெறவும், அவரவர் கடமையில் ஆர்வத்துடனும், கண்ணும் கருத்துமாயும் ஈடுபடும் ஆற்றலைத் தந்தருள வேண்டும்.
* சர்வ வல்லமை பொருந்தியவனே! ஊக்கத்துடன் செயலாற்றி குறிக்கோளை நோக்கி முன்னேற எங்களுக்கு நல்வழி காட்டுவாயாக.
* உலகிற்கு ஆதாரமாகத் திகழும் பரம்பொருளே! எல்லா உயிர்களும் இன்புற்று வாழவும், அனைவரும் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ இந்த நந்தன புத்தாண்டில் அருள் புரிவாயாக.

Advertisement
லஷ்மி ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement