மனதை அடக்க நல்ல வழி
ஏப்ரல் 15,2012,
09:04  IST
எழுத்தின் அளவு:

* ஒவ்வொரு நாளும், ஒரு வாழ்நாள் கடக்கிறது என்ற உணர்வு உண்டாக வேண்டும். அவற்றைப் பயனுள்ளதாக்கி கொள்ள வேண்டும் என்ற வைராக்கியம் வேண்டும்.
* மனதின் இயல்பே அமைதியற்று இருப்பது தான். எலி ஓரிடத்தில் நிற்காமல் இங்குமங்கும் தாவி ஓடுவது போல, மனமும் இங்கும் அங்கும் தாவித் திரியும் இயல்பு கொண்டது.
* மனதைக் கட்டுப்படுத்த விரும்பினால், அதனைக் கட்டிப்போடுவது ஒன்று தான் வழி. கடவுள் மீது பக்தி செலுத்துவது, நல்ல நூல்களைப் படிப்பது, நல்லவர்களோடு பழகுவது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வந்தால், மனம் நாளடைவில் அடங்கும்.
* செய்யும் பணியில் மனதை ஆர்வத்துடன் ஈடுபடுத்தினால் சலனம் குறைந்துவிடும். சின்ன விஷயமாக இருந்தாலும் வழிபாட்டுக்காக மலர்களைப் பறித்து மாலை தொடுப்பது, சந்தனம் அரைத்துக் கொடுப்பது, பூஜைப் பொருட்களைச் சேகரிப்பது போன்ற பணிகளைப் பக்தியுடன் செய்து வந்தால் மன அடக்கம் கைகூடும்.
- சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement