அமைதி பெறுக! அமைதி தருக!
ஏப்ரல் 15,2012,
09:04  IST
எழுத்தின் அளவு:

* இறைநம்பிக்கையாளர்களே! உங்களுடைய வீடுகளைத் தவிர மற்றவர்களின் வீடுகளில் அந்த வீட்டாரின் இசைவைப் பெறாமலும் அவர்களுக்கு ஸலாம்(அஸ்ஸலாமு அலைக்கும்- சாந்தி உண்டாகுக என்று) கூறாத வரையிலும் நுழையாதீர்கள்.
* இறைநம்பிக்கையாளர்களில் இருகுழுவினர் தங்களுக்குள் போரிட நேர்ந்தால், அவர்களிடையே சமாதானம் செய்து வையுங்கள். பிறகு, அவர்களில் ஒரு குழுவினர் மற்றொரு குழுவினரிடம் வரம்பு மீறி நடந்து கொண்டால் வரம்பு மீறிய குழுவினருடன் அவர்கள், இறைவனின் கட்டளையின்பால் திரும்பும் வரை போர் புரியுங்கள். அப்படி அவர்கள் திரும்பி விட்டால், அவர்களிடையே நீதியுடன் சமாதானம் செய்து வையுங்கள்.
* இறைவனின்(உண்மையான) அடியார்கள் எத்தகையவர்கள் எனில், அவர்கள் பூமியில் பணிவோடு நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் முறை கேடாக உரையாடினால், ""உங்களுக்கு ஸலாம்- சாந்தி உண்டாகட்டும்'' என்று கூறி விடுவார்கள்.
- வேதவரிகளும் தூதர்மொழிகளும் நூலில் இருந்து

Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement