மனநிறை
ஜூலை 05,2011,
10:07  IST
எழுத்தின் அளவு:

* நம்முடைய உறுப்புகள் ஒவ்வொன்றையும் ஒரு தெய்வீக சக்தியே இயக்குகிறது. சூரிய ஒளியின் துணையால் கண்கள் பார்க்கும் சக்தியைப் பெறுகின்றன. சிந்தனை சக்தியால் மனம் வளம் பெறுகிறது. இந்த சிந்தனைச் சக்தி, கலைத்தேவியின் அருளால் கிடைக்கிறது. இப்படி நம் உடலில் ஒவ்வொன்றையும் தெய்வீகச் சக்தியே இயக்குகிறது.

* சொர்க்கத்தை நாம் தேடிப் போக வேண்டியதில்லை. கட்டுப்பாடான வாழ்க்கை, நல்லொழுக்கம், பிறரிடம் காட்டும் அன்பு, நமக்கு உதவ முடியாத உயிர்களிடம் காட்டும் அன்பு இவற்றினால் நம்முடைய மனத்துக்குக் கிடைக்கும் மனநிறைவே சொர்க்கமாகும்.
* தர்மத்தைக் கடைப்பிடித்து, நல்ல பண்புகளுடன் வாழ்கின்றவன் என்னும் பெயரை நாம் பெறவேண்டும். குறுக்குவழியில் பணம் சம்பாதிக்கலாம். ஆனால், அப் பணம் நிலைப்பதில்லை. கடைசியில் அவமானத்தையும், அவப்பெயரையுமே உண்டாக்கும்.
* எளிய உணவை அளவாகச் சாப்பிடுங்கள். அதேபோல், அளவாக இனிமையாகப் பேசுங்கள். இவ்விரு பழக்கமும் உடம்புக்கும், உள்ளத்திற்கும் நல்லது. இவ்விரண்டிற்கும் நாக்கு என்ற உறுப்பே ஆதாரமாக இருக்கிறது. அதனால் தான் பெரியவர்கள் நாக்கினை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.


Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement