நட்பில் கவனம் வேண்டும்
டிசம்பர் 25,2008,
09:47  IST
எழுத்தின் அளவு:

* ஒரு டம்ளர் தண்ணீருக்கு எந்த மதிப்பும் கிடையாது. ஆனால், அதையே பத்து டம்ளர் பாலுடன் சேர்த்துவிட்டால் அதற்கு மதிப்பு வந்து விடுகிறது. அது பசுவின் பாலாகவே கருதப்படுகிறது. அதற்கு மாறாக ஒரு டம்ளர் பாலை பத்து டம்ளர் தண்ணீரில் விட்டு விடுங்கள். அதற்குரிய மதிப்பு போய்விடுகிறது. வெறும் தண்ணீர் ஏதோ கலங்கலான தண்ணீர் என்று அதைத் தூரக் கொட்டி விடுகிறோம். ஆகவே, நாம் நாடிச் செல்லும் நண்பர்களின் தொடர்பு நம்மை விட உயர்ந்ததாக இருக்க வேண்டும். அப்போது தான் நாம் வாழ்வில் உயர்வு பெறுவோம்.
* நாம் தாழ்மையானவர்களாக இருந்தாலும், நல்ல நட்பு நம்மைக் கைதூக்கி விட்டு விடும். புகைப் பிடிக்கும் ஒருவன் பத்து புகைப்பிடிக்காத நண்பர்களுடன் சேர்ந்தான் என்றால் நாளடைவில் நண்பர்களின் சகவாசத்தால் தன்னிடமிருந்த புகைப்பிடிக்கும் பழக்கத்தை விடத் தொடங்கி விடுவான். இதே தருணத்தில், தன்னிடமில்லாத தீயபழக்கத்தை நண்பர்களால் பழகி அல்லல்படுபவர்கள் நிறைய உண்டு. பழகும் நண்பர்களின் குணங்கள் நம்மிடம் தாக்கத்தை உண்டுபண்ணுவதால் இந்த விஷயத்தில் யாரும் அலட்சியமாக இருத்தல் கூடாது.


Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement