வணக்கத்திற்கு உரியவர்கள்
ஏப்ரல் 19,2012,
15:04  IST
எழுத்தின் அளவு:

* சுதந்திரத்தை இழந்தவன் இன்பமாக வாழ நினைப்பது என்பது, கண்களை விற்ற பணத்தில் சித்திரம் வாங்க நினைப்பது போலாகும்.
* உழுது வாழும் விவசாயிகள், உழைத்து வாழும் தொழிலாளர்கள் அனைவரும் நாம் வணங்குவதற்கு உரியவர்கள்.
* நெஞ்சில் உறுதியும், நேர்மை எண்ணமும் இல்லாமல் வஞ்சனை செய்யும் கயவர்களே, வாய்ச்சொல்லில் வீரர்களாக இருக்கிறார்கள்.
* உச்சந்தலை மீது வானம் இடிந்து விழும் அபாயம் நேர்ந்தாலும் மனதில் அச்சம் எழக்கூடாது. துணிச்சலை வளர்த்துக் கொண்டு தலைநிமிர்ந்து வாழுங்கள்.
* உலகத்தில் அன்பைக் காட்டிலும் சிறந்த தவம் வேறு கிடையாது. இதனை மேற்கொண்டால் மனதில் எண்ணியதெல்லாம் விரைவில் கைகூடும்.
* ஆயிரமாயிரம் தெய்வங்கள் இருப்பதாக தேடி அலையாதீர்கள். நல்ல அறிவு ஒன்றையே, வேதங்கள் தெய்வமாகப் போற்றுகின்றன.
* பக்திக்கு காவித்துணி, கற்றைச் சடை போன்ற வேடங்கள் தேவையில்லை. எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் நம் இதயத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
- பாரதியார்

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement