பணத்தில் பற்று வேண்டாம்
ஏப்ரல் 19,2012,
15:04  IST
எழுத்தின் அளவு:

* கடவுள் நமக்கு அச்சம் நிறைந்த ஜீவனை கொடுக்கவில்லை. சக்தியும் அன்பும் மனஅமைதியும் உள்ள ஜீவனைத் தான் கொடுத்திருக்கிறார்.
* பலசாலியை விடக் கோபம் கொள்வதில் மிதமாயிருப்பவனே சிறந்தவன். ராஜ்யங்களைக் கைப்பற்றுபவனை விடத் தன் உணர்ச்சியை அடக்கியாள்பவனே சிறந்தவன்.
* கடவுளே எனக்குத் துணை. மனிதன் எனக்கு என்ன செய்வானென்று அஞ்சமாட்டேன் என்று நான் தைரியமாகச் சொல்லலாமே.
* ஒடுக்கி அமுக்கப்பட்டவர்களுக்கு கடவுளே அடைக்கலமானவர். சங்கடவேளையிலும் அவரே அடைக்கலமானவர்.
* அடக்குமுறையில் நம்பிக்கை வைத்திருக்க வேண்டாம். கொள்ளைத்தனத்தில் வீணாகிவிட வேண்டாம். செல்வத்தின் மீது உங்கள் இருதயத்தை வைத்துவிட வேண்டாம்.
* நீ பரிபக்குவமான மனிதனையும், நேர்மையாளனையும் கவனித்துப்பார். அவனுடைய முடிவு அமைதியானதாயிருக்கும்.
* மனதில் பற்றற்றவர்கள் பாக்கியவான்கள். ஏனெனில் மோட்ச சாம்ராஜ்யம் அவர்களுடையது.
- பைபிள் பொன்மொழிகள்

Advertisement
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement