லட்சுமி கடாட்சம் நிலைக்கட்டும்
ஏப்ரல் 19,2012,
15:04  IST
எழுத்தின் அளவு:

* பத்மம் என்ற சொல் தாமரையைக் குறிக்கும். திருமகளை பத்மப்ரியே, பத்மினி, பத்மஹஸ்தே என்று தாமரையோடு இணைத்துச் சொல்வர்.
* தாமரை மலர், யானை மத்தகம், கோமயம், வில்வ இலை, சுமங்கலி வகிடு ஆகியவற்றில் லட்சுமி நித்யவாசம் செய்கிறாள்.
* திருமகளின் முகம் சிவந்த தாமரை போன்ற என்பதால் பத்மமுகி எனப்படுகிறாள்.
* தாமரையிடம் விருப்பம் கொண்ட திருமகளை விரும்பும் பகவானும் தன் நாபியில் தாமரை மலரைத் தாங்கியிருக்கிறார். அதனால் பத்மநாபன் என போற்றப்படுகிறார்.
* செந்தாமரை மலர்களைச் சூடுவதால் லட்சுமிக்கு பத்ம மாலாதரா என்ற சிறப்புப்பெயர் உண்டு. இந்தப் பெயரை உச்சரித்தால், வீட்டில் லட்சுமிகடாட்சம் நிலைத்திருக்கும்.
* பெண்களில் உத்தமமான குணம் கொண்ட பெண்களை பத்மினி ஜாதி என்று குறிப்பிடுவர். பத்மினி என்றால் தாமரைக்கொடி, லட்சுமி என பொருள்.
- காஞ்சிப்பெரியவர்
இன்று அட்சயதிரிதியை

Advertisement
காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement