கலாச்சாரத்தை மறக்காதீர்!
ஏப்ரல் 23,2012,
11:04  IST
எழுத்தின் அளவு:

* பெண்கள் ஆண்களைப் போல படிக்கலாம். தமது திறமைக்கேற்ப வேலையும் தேடிக் கொள்ளலாம். வரையறைக்கு உட்பட்ட வாழ்வே பெண்களுக்குப் பாதுகாப்பானது.
* பெண் கல்வி என்பது விவேகத்தையும், நன்மை தீமைகளை உணர்ந்தறியும் பகுத்தறிவையும் கொடுப்பதாக அமைய வேண்டும்.
* நல்ல சமுதாயத்தின் அடிப்படை பண்பும் ஒழுக்கமும். அதனை சமூகத்தில் வளர்க்கவேண்டிய கடமை தாய்மார்களுக்கு உரியதாகும்.
* வாழ்வுக்குத் தேவையான நவீன, நுட்பமான விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் பெண்களுக்கு எவ்வித தடையும் இருக்கக் கூடாது. ஆனாலும் பண்பாடு கலாச்சாரத்தையும் மறப்பது கூடாது.
* வழிதவறிச் செல்லும்போது பெண் மட்டுமல்லாமல் சமுதாயத்தின் அடிப்படையே ஆடத் தொடங்கிவிடும்.
* ஆன்மிகச் செல்வத்தைப் பாதுகாக்கும் பெட்டகங்களாக பெண்கள் திகழ வேண்டும். அப்போது தான் எதிர்கால சமுதாயம் சிறந்து விளங்க முடியும்.
- சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement