இன்பத்திற்கு வழிகாட்டுபவன்
ஏப்ரல் 23,2012,
11:04  IST
எழுத்தின் அளவு:

* கண்ணன் என் தந்தை. அதனால், என்னிடம் செல்வத்திற்கு ஒருபோதும் குறைவில்லை. உள்ளத்தில் செருக்கு உண்டானால் அதை அழிக்க அவன் கோபத்தில் சீறிப் பாய்வான்.
* நல்லவர்களுக்குத் தீமை வராமல் காத்தருளும் கண்ணன், தீயவர்களுக்கு கொடுமை செய்வான்.
* ஒருநாள் இருந்தது போல மறுநாள் அவன் இருப்பதில்லை. விதி என்னும் அமைச்சரைக் கொண்டு தன் விருப்பம் போல ஆட்சி செய்வான்.
* பிறப்பால் உயர்வு தாழ்வு கருதும் பொய்க்கருத்துகளுக்கு கண்ணனிடம் அனுமதியில்லை. நடுவுநிலையைப் பின்பற்றினால் மகிழ்வான்.
* உலகியல் துன்பம் கண்டு உள்ளம் வருந்தினால் புன்னகையுடன் சிரித்துப்பேசி நம் துன்பத்தை நொடியில் போக்குவான்.
* அன்பினைக் கைக்கொண்டால் துன்பம் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று அறிவுரை கூறுவான். அறவழியில் நடப்போருக்கு எப்போதும் இன்பமே உண்டாகும் என்று வழிகாட்டுவான்.
- பாரதியார்

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement