கடவுளுக்கு அர்ப்பணியுங்கள்
ஏப்ரல் 24,2012,
10:04  IST
எழுத்தின் அளவு:

* ஆன்மிக உயர்வு பெற வேண்டுமானால் மனதில் குறுகிய எண்ணங்களுக்கு இடம் தராதீர்கள்.
* தனக்கு என்று எதையும் வைத்துக் கொள்ளாமல் அனைத்தையும் கடவுளுக்கு அர்ப்பணித்து விடும் துணிவு பக்திக்கு மிக அவசியம்.
* எப்போதெல்லாம் சுயநலம் நமக்குள் எழுகிறதோ அப்போதெல்லாம் மன ஆற்றல் அனைத்தும் நாலாபுறமும் சிதறுகிறது.
* எப்போதும் உழைத்துக் கொண்டே இருங்கள். ஆனால், செயலால் ஏற்படும் விளைவு மனதில் பதிவுகளை உண்டாக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
* புலன்கள் என்னும் குதிரைகளை மனம் என்னும் கடிவாளத்தால் இழுத்துப் பிடியுங்கள்.
* அறியாமை நம்மிடம் இருக்கும் வரை நம்மை விட்டுத் துன்பங்கள் விலகாது. இதற்கு ஒரே தீர்வு நாம் ஆன்மிக வலிமை மிக்க தூய்மையானவர்களாக மாறுவது தான்.
* நாய்க்கு சோறு இடுவதாக இருந்தாலும் அதற்குள் இருக்கும் கடவுளுக்குத் தான் நீங்கள் சேவை செய்யும் வாய்ப்பைப் பெறுகிறீர்கள்.
- விவேகானந்தர்

Advertisement
விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement