அமைதிக்குள் நுழையுங்கள்
மே 01,2012,
10:05  IST
எழுத்தின் அளவு:

* மனதை அலைக்கழிக்கும் வீண் விஷயங்களில் இருந்து விடுபடுங்கள். அமைதியாக இருங்கள். பயனுள்ள விஷயங்களை மட்டுமே பேச பயிற்சி எடுங்கள்.
* மனித மனதில் மட்டும் அன்பு இருப்பதாக எண்ண வேண்டாம். அது உலகமெங்கும் நிறைந்திருக்கிறது. உயிரற்ற கல், மண்ணில் கூட அன்பு உள்ளது. எனவே, எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்துங்கள்.
* ஆண்டுக்கணக்கில் செய்யவேண்டிய பெரிய விஷயங்களைக் கூட, சில நாட்களிலோ, சில மணிநேரத்திலோ நம்மால் சாதிக்க முடியும். அதற்குத் தேவை ஆன்மிகப்பயிற்சி மூலம் கிடைக்கும் மனத்துணிவு.
* நோயால் ஏற்படும் துன்பத்தில் பத்தில் ஒன்பது பங்கு, பயத்தால் உருவாகிறது. பயமே நோய்க்கு மூலகாரணம்.
* துன்பத்தை இறைவனிடம் எடுத்துச் சொல்லி சரணடைவதால் அதன் கடுமை குறைந்து முற்றிலும் நீங்கிவிடும்.
-ஸ்ரீஅன்னை

Advertisement
ஸ்ரீ அன்னை ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement