இரண்டிலும் அவனை மறவாதீர்!
மே 01,2012,
10:05  IST
எழுத்தின் அளவு:

* அகந்தையை அறவே கைவிடுங்கள். அனைத்தும் இறைவன் செயல் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.
* ஆர்வத்துடன் பணியில் ஈடுபட்டால் மனதில் வேறு எந்த சிந்தனையும் எழுவதில்லை. ஒரு பணியை இறைவனுக்காக செய்கிறோம் என்ற உணர்வு உண்டானால், அதன் மதிப்பு கூடிவிடும்.
* எண்ணம், வாக்கு, செயல் மூன்றாலும் சத்தியம், தர்மத்தைப் பின்பற்றுங்கள். அதன்மூலம் வாழ்வில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாவதை உணர்வீர்கள்.
* மகிழ்ச்சியான நேரத்தில் இறைவனை மறப்பதும், துன்பம் வந்தால் சிந்திப்பதுமாக மக்கள் இருக்கிறார்கள். எதுவந்தாலும் இறைவனை மறவாதீர்கள்.
* துன்ப நேரத்தில் இறையருள் கிடைக்கவில்லையே என கலங்காதீர்கள். பக்தர்களுக்கு உதவி செய்ய வேண்டிய சந்தர்ப்பமும், நேரமும் வரும்போது இறைவன் தானாகவே வெளிப்பட்டு விடுவான்.
* நன்மை தரும் இனிய வார்த்தைகளைப் பேசுங்கள். பிறருக்குப் பயன்தரும் நல்ல செயல்களைச் செய்யுங்கள். இனிய வாழ்வுக்கு இவ்விரண்டுமே போதுமானவை.
-சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement