இறைநம்பிக்கையின் பகுதிகள்
மே 01,2012,
10:05  IST
எழுத்தின் அளவு:

* இறைவன் கூறுகின்றான்: எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்பணிகள் ஆற்றி தொழுகையையும் நிலைநாட்டி ஜகாத்தும்(தர்மமும்) கொடுத்து வருகிறார்களோ அவர்களுக்குரிய கூலி நிச்சயமாக அவர்களுடைய அதிபதியிடம் உண்டு. அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை. அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்.
* நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்களையும், பூமியில் அராஜகம் செய்து திரிபவர்களையும் நாம் சமமாக்கி விடுவோமா என்ன? இறை அச்சமுள்ளோரை ஒழுக்கக்கேடர்களைப் போன்று ஆக்குவோமா என்ன?
* நபிகள் நாயகம்(ஸல்) நவின்றார்கள்: தனக்கு விரும்புவதையே தனது சகோதரனுக்கும் விரும்பாத வரை, ஒருவன் இறைநம்பிக்கையாளனாக மாட்டான்.
* எவருடைய அண்டை வீட்டார் அவரது துன்பங்களை விட்டுப் பாதுகாப்பு பெறவில்லையோ அவர் இறைநம்பிக்கை இல்லாதவர்.
* நாணமும், பாதையில் கிடக்கும் தொல்லை தரும் பொருட்களை அப்புறப்படுத்துவதும் இறை நம்பிக்கையின் பகுதிகளாகும்.
(வேதவரிகளும் தூதர்மொழிகளும் நூலில் இருந்து)

Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement