தந்தையருக்கு ஒரு அறிவுரை
மே 01,2012,
10:05  IST
எழுத்தின் அளவு:

* ஒவ்வொன்றிற்கும் ஒரு பருவம் உண்டு. வானின் கீழ் உள்ள ஒவ்வொரு நோக்கத்திற்கும் ஒரு காலம் உண்டு. பிறப்பதற்கு ஒரு காலமும் இறப்பதற்கு ஒரு காலமும் விதைப்பதற்கு ஒரு காலமும் விதைத்தலின் விளைச்சலைப் பறிப்பதற்கு ஒரு காலமும் உண்டு.
* தகப்பன்மார்களே! உங்கள் குழந்தைகளுக்கு எரிச்சலை கிளப்பாதீர்கள். இல்லையெனில் அவர்கள் மனந்தளர்ந்து போவார்கள்.
* எளியவனின் குடும்ப விருத்திகளை மந்தையைப் போலக் கர்த்தர் ஆக்குகிறார்.
* உன் மனைவி உன் வீட்டோரங்களிலுள்ள கனி தரும் திராட்சைக் கொடி போல இருப்பாள். உன் குழந்தைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஓலிவ் மரக்கன்று போல் தழைத்திருப்பார்கள்.
* ஞானத்தைத் தேடிக் கொள். தேடியதையெல்லாம் கொண்டு அறிவு பெறு. அதை மேன்மைப்படுத்து. அது உன்னை மேன்மைப்படுத்தும்.
* புருஷர்கள் தங்கள் உடலைப் போலத் தங்கள் மனைவியரைக் காதலிக்கட்டும். தன் மனைவியைக் காதலிக்கிறவன் தன்னையே காதலிக்கிறான்.
-பைபிள் பொன்மொழிகள்

Advertisement
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement