நன்றியுடையவராய் இருங்கள்
மே 04,2012,
08:05  IST
எழுத்தின் அளவு:

* உருகிய தங்கத்தில் ரத்தினக்கல்லைப் பதிப்பது போல உருகிய உள்ளத்தில் இறைவனின் அருள் பதிந்துவிடும்.
* எந்தச் செயலிலும் சிந்தித்து செயல்படுவது அவசியம். ஒருவர் போன வழியில் கண்ணை மூடிக் கொண்டு செல்வது அறிவுடைமை ஆகாது.
* பெற்றோரின் கண்ணீரைத் துடைப்பது பிள்ளைகளின் கடமை. எந்த நிலையிலும் அவர்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்கவேண்டும்.
* மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றாலும், ஒரு மனிதன் பிறருக்கு நன்மை செய்ய முயலவேண்டும்.
* மனிதவாழ்வில் வாழ்வு, தாழ்வு இரண்டும் மாறி மாறி வரும். இரண்டையும் சமமாக எடுத்துக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும்.
* பிள்ளைகளுக்கு நல்ல பண்புகளைக் கற்றுத் தர எண்ணினால், பெற்றோரும் அதற்கு தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
* வயலில் இட்டவிதை பன்மடங்காகப் பெருகுவதைப் போல ஒருவர் செய்த நல்வினை, தீவினை பிறவி தோறும் தொடர்ந்து வருகிறது.
- வாரியார்

Advertisement
கிருபானந்த வாரியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement