காளிதேவியை வணங்குவோம்
ஜனவரி 25,2009,
17:40  IST
எழுத்தின் அளவு:

* பேதை நெஞ்சமே! எதற்கும் மனம் வருந்தி இருப்பதனால் பயன் ஒன்றும் இல்லை. இன்னும் ஒருமுறை நான் சொல்வதைக் கேட்பாயாக! தாய்தந்தையர் வயிற்றில் நாம் பிறந்து வந்தது நம் விருப்பத்தினால் அல்ல. வாழ்வின் தொடக்கம் போலவே இடைப்பட்ட வாழ்க்கையும், வாழ்வின் முடிவும் நம் வசம் இல்லை.
* மனிதனே! நிலைபெற்ற தெய்வத்தின் அருள்சக்தியினால், உனக்கு உலகப்பொருள்கள் அனைத்தும் ஒரு கட்டத்தில் சலித்துப் போகும். அப்படி சலிப்பு வந்தபின்னர் உனக்கு ஒரு கவலையும் இல்லை. அச்சமயத்தில், தெய்வத்தை விட்டுப் பிரியாமல், அவரையே நினைத்து இவ்வுலகில் இருந்து விடுதலையை பெற்றுக் கொள்.
* நாம் எதிர்பாராத சமயத்தில் நல்ல பலன்களை உண்டாக்கி, நாம் எண்ணியபடியே பயனடையச் செய்வது காளியின் அருட்செயல். அந்த மகாசக்தி நமக்குச் செய்த நன்றியை ஒரு போதும் மறக்காதே.
* "என்னை ஆளுகின்ற பெருந்தேவி, வீரர்கள் வழிபடும் அன்னை, தேவாதிதேவர் எல்லாம் பணிகின்ற தேவி, எல்லையில் காவல் செய்யும் தேவி, மனைவாழ்விற்கு பொருட்செல்வம் தரும் அருள்தேவியாகிய காளிதேவியின் மென்மையான மலரடியே துணை' என்று அம்பிகையை வாழ்த்தி ""நமோநம ஓம்சக்தி'' என்று தினமும் சொல்.

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement