மனஉறுதியை வழங்கு தாயே!
மே 13,2012,
16:05  IST
எழுத்தின் அளவு:

* பராசக்தியே! எங்கும் நிறைந்தவளே! யாதுமாகி இருப்பவளே! தீமை, நன்மை அனைத்தும் உன் விருப்பப்படியே உலகில் நடக்கின்றன. நாங்கள் வாழும் பொய்யான வாழ்வில் இருந்து பாதுகாப்பாய்.
* எந்த நாளும் உன் திருவடிகளைப் போற்றி இசைப்பாடல்கள் பாடுவோம். கந்தனைப் பெற்றவளே! கருணை வடிவானவளே! ஒன்றை விட்டு மற்றொன்றை மனம் நாடும் துயரத்தில் இருந்து என்னைக் காத்தருள வேண்டும்.
* வானும், மண்ணும்,காற்றும் என அனைத்துமாகி இருப்பவளே! உன்னுடைய திருவடிகளே சரணம் என்று கூறும் மனஉறுதியை வழங்குவாயாக.
* தாயே! எனக்கு செல்வவளத்தை தந்தருளவேண்டும். உலகில் தர்மத்தை காக்கும் திறத்தை வழங்க வேண்டும். மலர் போன்ற உன் திருவடிகளில் விழுந்து அபயம் கேட்கும் எனக்கு அருள்புரிய வேண்டும்.
* அம்மா! நான் கேட்கும் வரங்களை இன்றே அருள்புரிய வேண்டும். நல்ல உடல்வலிமை, ஒளிநிறைந்த முகம்,செயல் வெற்றி, பெருஞ்செல்வம், நல்லோர் துணை யாவும் வேண்டும்.
-பாரதியார்

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement