குறுக்கு வழி வேண்டாமே!
மே 13,2012,
17:05  IST
எழுத்தின் அளவு:

* நமக்கு எது வேண்டுமோ அதை கடவுளிடம் கேட்பதில் தவறில்லை. கடவுள் உங்களுடைய தகுதிக்கு ஏற்பக் கொடுத்தருள்வான்.
* நல்லவழியில் பொருள்தேடி வாழும் வாழ்க்கையே சிறந்தது. குறுக்குவழியில் பணம் சம்பாதிக்கலாம். ஆனால், அதோடு
அவமானமும், அவப்பெயரும் சேர்ந்தே வரும்.
* பெற்றவர்கள், குழந்தைகளின் உள்ளத்தில் அன்பை விதைக்க வேண்டும். இதனால் பகையுணர்வு மறைந்து சமுதாயத்தில் ஒற்றுமை தழைக்கும்.
* நாவைக் கட்டுப்படுத்தப் பழகுங்கள். எளிய உணவையே விரும்பிச் சாப்பிடுங்கள். இனிமையாகப் பேசப் பழகுங்கள்.
* பணம், அதிகாரம் ஆகியவை நமது கட்டுக்குள் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அகம்பாவத்தால் வாழ்வு சீர்குலைந்து விடும்.
* அன்பில்லாத இதயம் வறண்ட பாலைவனத்திற்குச் சமம். இறைவன் அன்பு மயமாக இருக்கிறார். எல்லா உயிர்களையும் நேசிக்கவேண்டியது மனிதனின் அடிப்படை கடமை.
* எண்ணம், சொல், செயல் மூன்றும் இணைந்திருக்கும்ஆனால் மனித வாழ்வு மதிப்புடையதாக இருக்கும்.
-சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement