நியாயமாகச் சம்பாதியுங்கள்
மே 15,2012,
09:05  IST
எழுத்தின் அளவு:

* ஒன்றுமில்லாதவன் தன்னை ஏதோ ஒன்று நினைத்துக் கொள்வானாகில் அவன் தன்னைத் தானே வஞ்சித்துக் கொள்கிறான்.
* அநியாயத்தின் மூலம் கிடைக்கும் பெரும் வருமானத்தை விட நியாயமாகச் சம்பாதிக்கும் சொற்பமே மேலானது.
* எந்தப் பறவையாயிருந்தாலும் அதன் கண் பார்வையின் முன்னால் வலை விரிப்பது வீணே!
* தன் வழியை உணர்வதே அறிவுள்ளவனின் ஞானமாகும். ஆனால், முட்டாள்களின் புத்தியீனமோ ஏமாற்றமே.
* நேர்மையாளரின் பாதை உதயஒளி போன்றது. நடுப்பகல் வரை பரிபூரணமாக அதன் பிரகாசம் மென்மேலும் உயர்ந்து கொண்டே போகும். தீயவர்களின் பாதையோ காரிருள் போன்றது. எதில் இடறி விழுகிறோம் என்பது அவர்களுக்கே தெரிவதில்லை.
* வாக்குறுதி கொடுத்து அதைக் கொண்டு செலுத்தாமல்இருப்பதை விட வாக்குறுதி செய்யாமலிருப்பதே சிறந்தது.
* ஊமையின் பொருட்டும் திக்கற்றவர்களின் நியாயத்தின் பொருட்டும் உன் வாயைத் திற.
* வாழ்த்துதலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்தே புறப்படுகிறது.
- பைபிள் பொன்மொழிகள்

Advertisement
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement