மதங்களின் ஒரே குறிக்கோள்
மே 21,2012,
09:05  IST
எழுத்தின் அளவு:

* ஒழுக்கம் உள்ளவராக இருங்கள். தைரியத்தை மனதில் நிலைநிறுத்துங்கள். இதயப்பூர்வமான அன்பை வளர்த்துக் கொள்ளுங்கள்.
* கோழை பாவம் செய்கிறான். தைரியசாலி மனதால் கூட பாவம் செய்வதில்லை.
* நம்மிடமுள்ள தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழி, மற்றவர்கள் தங்கள் தெய்வீக இயல்பை வெளிப்படுத்தும்படி செய்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு உதவி செய்வது தான்.
* அனைத்து மத வழிபாட்டின் ஒட்டுமொத்த சாராம்சம் என்பது தூய்மையாக இருப்பதும், மற்றவர்களுக்கு நன்மை செய்வது மட்டும் தான்.
* பாமரனைப் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவனை தெய்வமாகவும் உயர்த்தும் கருத்தே ஆன்மிகம்.
* சுயநலம், சுயநலமின்மை என்பவற்றைத் தவிர கடவுளுக்கும் சாத்தானுக்கும் வேறுபாடில்லை.
* நல்லொழுக்கம் ஒருவனை முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்கிறது. தீயொழுக்கமோ கீழ்நிலைக்கு இழுத்துச் செல்கிறது.
- விவேகானந்தர்

Advertisement
விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement