நம்பிக்கை நெஞ்சில் வை
டிசம்பர் 04,2007,
18:13  IST
எழுத்தின் அளவு:

உன் குற்றம் குறைகளை கண்டுபிடி. அடுத்தவரிடம் குணங்களைத் தேடு. அடுத்தவரிடமுள்ள குறைகளைத் தேடுவது பாவம். மிருக உணர்ச்சிகளை களைந்து விட்டால், தெய்வீக உணர்வுகள் பெருக்கெடுக்கும்.

நீ வெளிச்சத்தில் இருக்கிறாய். ஒளி உன்னிடம் இருக்கிறது. நீயே ஒளியாகிறாய். உன் சொல், செயல், சிந்தனை, குணம், மனம் ஆகியவற்றை கவனி.

நீ நம்பிக்கையை வளர்த்துக்கொள். அப்போதுதான் பிரச்னைகள் வெள்ளம்போல வந்து தாக்கும்போது, பாறைபோல எதிர்த்துநிற்க இயலும். வெளியுலக வாழ்வின் மாறும் சூழ்நிலைகளை அந்த நம்பிக்கை மறக்கவைக்கும். ராமதாசர் சிறையிலிடப்பட்டபோது, அந்த நன்மைக்காக ராமருக்கு நன்றி கூறினார். ஏனென்றால், சிறையின் பெருஞ்சுவர்கள் கனிவு கூர்ந்து, வெளி உலகத்தை முழுமையாக விலக்கிவைத்து, ராமநாம சிந்தனையில் இடையூறின்றி தொடர வைத்தமைக்காக நன்றி பாராட்டினார்.

ஞானக்கதவுகள் திறக்கட்டும். அறியாமைத்திரை கிழிபடட்டும். தெய்வீக பேரானந்தம் வீட்டுக்குள் செல்லட்டும். நிலையான நிம்மதியில் நீ இருப்பாய்.

முன்னதாக புறப்படு. மெதுவாக ஓட்டு. பாதுகாப்பாய் போய்ச்சேர். உன் வாழ்வை ரோஜாப்பூவாக்கிக்கொள். அது 'நறுமணம்' என்ற மவுனமொழியில் பேசட்டும்.

தன்னலமற்ற தொண்டு என்னை மகிழச் செய்கிறது. அனைத்து ஒழுக்கங்களுக்கும் அடிப்படை தூய்மையான மனம்தான்.

மிக விரும்பக்கூடிய செல்வம் இறையருளே. கண்ணை இமை காப்பதுபோல் அவன் உங்களை காப்பாற்றுவான். இதில் சந்தேகம் வேண்டாம். நல்லதையே கேள்; நல்லதையே காண்; நன்றே செய்; நலமே எண்ணு; அப்போது தீயவை களையப்படும். இறையருள் உனக்கு இனிதே கிடைக்கும்.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement