நல்லதை மட்டுமே செய்வோம்
ஜனவரி 28,2009,
09:37  IST
எழுத்தின் அளவு:

* கடவுள் ஒரு செயலும் செய்வதில்லை. எனினும் அவனின்றி ஓர் அணுவும் அசைவதில்லை. அவர் சர்வாதிகாரியோ, ஏகாதிபதியோ, கொடுங்கோலனோ அல்ல. வாஞ்சையோடு அன்பு காட்டும் தாய். நம்மை விட்டுப் பிரியாத என்றும் துணையாக நிற்கும் நண்பன்.
* நல்லொழுக்கம், மனஅடக்கம், கருணை, இரக்கம், சேவை, பூரணத்துவம், ஆத்மசிந்தனை ஆகிய குணங்கள் மனிதனை தெய்வீகம் கொண்டவனாக்கும் தன்மை கொண்டவை.
* எண்ணங்களிலும், பேச்சுக்களிலும், செயல்களிலும் தூய்மை உணர்வைக் கொள்வாயாக. உனது அந்தரங்க நோக்கமும், பார்வையும், எண்ணமும் பரிசுத்தமாக இருக்குமானால் தெய்வம் உன் நெஞ்சில் குடிகொள்ளும்.
* மற்றவர்களுக்கு தீங்கு உண்டாக்கும் செயல்களையோ, பின்னாளில் நாம் வெட்கப்படக்கூடிய செயல்களையோ ஒரு பொழுதும் செய்யாதீர்கள். மாறாக எல்லோராலும் போற்றப்படக்கூடிய நல்ல செயல்களை மட்டுமே செய்யுங்கள். இதுவே நல்லொழுக்க நெறியாகும்.
* பிறர் நம்மை பழிதூற்றினால் கூட பழிவாங்கும் எண்ணத்தை கொள்ளாதீர்கள். நம்மிடத்தில் சத்தியம் நிலைபெற்றிருக்குமானால் எல்லாவிதமான நல்ல குணங்களும் பொலிந்து நிற்கும்.

Advertisement
சிவானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement