நல்ல மனிதனாக வாழ்வோமே!
மே 25,2012,
10:05  IST
எழுத்தின் அளவு:

* கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடிகொண்டிருக்கிறார். இதைத் தவிர தனியாக ஒரு கடவுள் உலகில் இல்லை.
* மக்களுக்குச் சேவை செய்பவன், உண்மையில் கடவுளுக்கே சேவை செய்தவனாகிறான்.
* தேவையில்லாத விஷயங்களைப் பற்றி அலட்டிக் கொள்வதால் நம் மனசக்தி வீணாகிறது. அமைதி உடன் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுங்கள்.
* அச்சத்திற்கு அப்பால் செல்லுங்கள். அச்சமற்றவராக வாழத் தொடங்குங்கள்.
* உண்மை, அன்பு, நேர்மை மூன்றும் ஒருவனுக்கு இருந்துவிட்டால் அவனை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
* முதலில் நல்ல மனிதனாக வாழப் பழகுங்கள். அதன் பிறகு பொன்,பொருள்,செல்வம் எல்லாம் உங்களைப் பின் தொடர்ந்து வரும்.
* பொறாமை அழிவிற்கு வழிவகுக்கும். துணிச்சல், மனவலிமை, கீழ்ப்படியும் பணிவு இருக்குமிடத்தில் பொறாமை இருப்பதில்லை.
- விவேகானந்தர்

Advertisement
விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement