பசுவதை ஏன் கூடாது?
ஜனவரி 31,2009,
10:10  IST
எழுத்தின் அளவு:

நமது கலாச்சாரத்தில் பசு, பாம்பு மற்றும் காகம் ஆகிய மூன்று உயிரினங்களுக்கம் தனி இடம் தரப்பட்டுள்ளது. உடலின் பரிணாம வளர்ச்சியைப் பார்க்கும்போது, குரங்கு நமக்கு மிக அருகில் இருக்கிறது. ஆனால், ஆத்மாவின் பரிணாம வளர்ச்சியைப் பார்க்கும் போது இம்மூன்றுமே நமக்கு அருகாமையில் உள்ளன. இந்த உயிர்களைக் கொல்வது என்பது கிட்டத்தட்ட மனித உயிர்களைக் கொல்வது போலத்தான். கிராமங்களில் இன்னமும் மனிதர்கள் பசுக்களுடன் மிக ஆழமான உறவு வைத்துள்ளனர். உயிரினங்களில் பசுமட்டுமே மனிதனைப் போல ஆழமான உணர்வுகளைக் கொண்டுள்ளது. நீங்கள் துக்கமாக இருந்தால் பசு உங்களுக்காக உண்மையாகவே கண்ணீர் விடும்.


இயற்கையில் எந்த வனவிலங்கைத் தொட்டாலும் எதிர்ச்செயல் புரியும். ஆனால், நளினமாகக் கையாண்டால் விஷப்பாம்பு கூட எதிர்ப்பினைக் காட்டுவதில்லை. ஆன்மிகசக்தி உள்ள இடங்களை நாடி பாம்புகள் தானாகவே வந்து விடும். சில யோகிகள் பாம்பு மற்றும் பசுவிற்கு பிறவிச்சுழற்சியிலிருந்து விடுதலை அளித்த சம்பவங்களும் உண்டு. மற்ற உயிரினங்களை அப்படி விடுவிக்கமுடியாது. பசுவையோ, பாம்பையோ தெரிந்தோ, தெரியாமலோ கொல்ல நேர்ந்தால் மனிதர்களைப் புதைப்பது போல அதைப் புதைக்கவேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.


-சத்குரு ஜக்கி வாசுதேவ்

Advertisement
சத்குரு ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement