பொறுமையுடன் இருங்களேன்!
மே 28,2012,
15:05  IST
எழுத்தின் அளவு:

* இறைவன் கூறுகின்றான்: வறுமை மற்றும் துன்பங்களின் போதும், சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் நடக்கும் போராட்டத்தின் போதும் பொறுமையுடன் நிலைத்து இருப்பவர்கள் புண்ணியவான்கள் ஆவர்.
* (நபியே) இம்மக்கள் எவற்றையெல்லாம் (உமக்கு எதிராக) புனைந்துரைக்கின்றார்களோ, அவற்றின் மீது பொறுமை கொள்வீராக! மேலும், கண்ணியமான முறையில் அவர்களை விட்டும் விலகி விடுவீராக! பொய்யென வாதிடுபவர்களான இந்தச் சுகவாசிகளைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை என்னிடம் விட்டுவிடுவீராக!
* நீங்கள் தண்டிக்கக் கருதினால், உங்கள் மீது எந்த அளவுக்கு அக்கிரமம் புரியப்பட்டதோ அதே அளவுக்குத் தண்டியுங்கள். ஆயினும், நீங்கள் பொறுமையாக இருப்பீர்களாயின்.. திண்ணமாக இதுவே பொறுமையைக் கடைப்பிடிப்பவர்களுக்கு மிகச் சிறந்ததாகும்.
* நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: சண்டையில் பிறரை வீழ்த்துபவன் அல்லன் வீரன்: கோபத்தை அடக்குபவனே வீரன்.
(வேதவரிகளும் தூதர் மொழிகளும் நூலில் இருந்து)

Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement