Advertisement
குறிக்கோளுடன் வாழுங்கள்
ஜூன் 03,2012,
09:06  IST

* மனிதன் வெறும் உணவை மட்டும் தேடிக் கொண்டிருக்கக்கூடாது. கடவுளை அறிவதற்காக பிறந்துள்ளோம் என்பதை உணர வேண்டும்.
* மனிதனுக்கு இருகண்கள் இருந்தும் கூட "எல்லாம் நானே' என்ற அகங்காரம் கொண்டு பார்வையற்றவனாக வாழ்கிறான்.
* எதைச் செய்தாலும் மனச்சாட்சியிடம் கேட்டு செயல்படுங்கள். உங்களுக்கு தக்க எஜமானாகவும், வழிகாட்டியாகவும் இருப்பது அதுவே.
* பிரார்த்தனை உதட்டிலிருந்து எழும் வெறும் வார்த்தைகளாக இருக்கக்கூடாது. மனதின் அடி ஆழத்தில் இருந்து எழுவதாக இருக்கவேண்டும். அதுதான் இறைவனின் அருளைப் பெற்றுத்தரும்.
* வேகமாகப் போவதை விட விவேகமாகச் செல்வதே நல்லது. அப்போது தான் போய்ச் சேரும் இடத்திற்குச் சரியாக சென்று சேர முடியும்.
* குறிக்கோள் இல்லாத வாழ்க்கை, நேர்மை இல்லாத வருமானம், ஒழுக்கம் இல்லாத கல்வி, தூய்மை இல்லாத பக்தி இவை அனைத்தும் பயன் சிறிதும் விளைவதில்லை.
- சாய்பாபா

சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement