உறுதியான மனம் வேண்டும்
பிப்ரவரி 07,2009,
10:49  IST
எழுத்தின் அளவு:

* தீயவைகளைச் செய்யாதிருக்க நமக்கு உறுதியான மனம் வேண்டும். ஐம்பொறி இன்பங்களை நாம் அடக்க வேண்டும். ஆடல் பாடல்களைப் பார்ப்பது தேவையற்ற ஒன்றாகும்.
* விரதங்களை மிகவும் புனிதமானதாக நாம் எண்ணுதல் வேண்டும். விரதங்களை நாமே அலட்சியமாக எண்ணும் தீய பழக்கங்கள் நம்மை விட்டுப் போதல் வேண்டும்.
* தீயவை எல்லாம் இனிச் செய் யேன் என்கிற உறுதியான மனம் நமக்கு வேண்டும்.
*உறுதியான மனம் உடையவனே துன்பத்தைப் பொறுத் துக் கொள்ளும் ஆற்றல் உடையவன் ஆவான்.
*இன்றைய உலகம் இன்ப கேளிக்கைகளில் மூழ்கி உள்ளது. எங்கு பார்க்கினும், "சுகம் வேண்டும்" "சுகம் வேண்டும்" என மக்கள் எப்படியும் பொருள் ஈட்ட வேண்டும் என்ற ஆர்வத்தில் துடிக்கின்றனர். பொருளுக்காகப் பிறரை அடித்து நொறுக்கவும் தயங்கவில்லை. 
-மகாவீரர்

Advertisement
மகாவீரர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement