நல்லவர்களுடன் சேருங்கள்
ஜூன் 12,2012,
09:06  IST
எழுத்தின் அளவு:

* தாயை நாடும் குழந்தையைப்போல இறைவனை அன்புடன் நேசிக்க வேண்டும். பிரார்த்தனை என்பது இதயம் கனிந்த வார்த்தைகளாக இருக்க வேண்டும்.
* அன்பு இல்லாத மனிதன் மிருகத்திற்குச் சமம். பிறவிப் பயன் பெற மனதை அன்பால் நிரப்புங்கள்.
* பஜனையும், பூஜையும் வெறும் சடங்காக இருக்கக்கூடாது. உள்ளம் ஒன்றி ஒருமித்த சிந்தனையுடன் கடவுளை வணங்க வேண்டும்.
* இறைவனை நாம் வெளியுலகத்தில் தேடுகிறோம். ஆனால் அவர் நமக்குள்ளேயே இருக்கிறார்.
* சுயநலத்தை தேடும் மனிதன் தர்மத்தைப் புறக்கணித்து பொருளை தேடுகிறான். ஆனால், அந்த செல்வத்தால் நிம்மதியை இழக்கிறான்.
* தீயவர் சேர்க்கையால் மனிதனது வாழ்வு திசை மாறிப் போய்க்கொண்டிருக்கிறது. எனவே, துஷ்டரைக் கண்டால் விலகி ஓடிவிடுங்கள்.
* தீயவர்களைத் தவிர்த்தால் மட்டும் போதாது. நல்லவர்கள் கூடி இருக்கும் சத்சங்கத்தோடு நம்மை இணைத்துக் கொள்ள வேண்டும்.
- சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement