ஏழையிடம் கருணை கொள்க!
ஜூன் 12,2012,
09:06  IST
எழுத்தின் அளவு:

* தீபக்கால் வீட்டிலுள்ள அனைவருக்கும் வெளிச்சம் தரும். அதுபோல, மனிதர்கள் உங்கள் முதற்காரியங்களைக் காணும் பொருட்டு உங்கள் ஒளி அவர்கள் முன் பிரகாசிக்கட்டும்.
* இரவோ முன்பே கழிந்து போயிற்று. பகலோ மிகவும் நெருங்கி விட்டது. ஆகையால், இரவின் செயல்களை உதறிவிட்டு ஒளியின் கவசங்களை அணிந்து கொள்வோம்.
* ஏழை மீது இரக்கம் வைப்பவன் கடவுளுக்குக் கடன் கொடுக்கிறான்.
* ஆட்டு மந்தைக்குள் வாசல் வழியே நுழையாமல் வேறு வழிகளில் நுழைபவன் கள்ளனாயிருப்பான்.
* எளியவர்களின் எதிர்பார்ப்பு என்றைக்குமே நசித்துப் போய் விடுவதில்லை.
* கடவுள் நீதியுள்ளவர். நீதியை நேசிப்பவர். செம்மையானவனையே அவருடைய முகம் நோக்குகிறது.
* துன்பம் பொறுமையையும், பொறுமை அனுபவத்தையும், அனுபவம் நம்பிக்கையையும் உண்டாக்குகிறது.
- பைபிள் பொன்மொழிகள்

Advertisement
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement