கனவெல்லாம் நனவாகட்டும்!
ஜூன் 19,2012,
11:06  IST
எழுத்தின் அளவு:

* மனமே! இன்று முதல் என் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடப்பாயாக. நீயாக எதையும் விரும்பக்கூடாது. உனக்கு நானே எஜமானன்.
* மனமே! பராசக்தியின் திருவடியை வணங்கி, நீதி தவறாமல் வாழ்வாயாக. உழைப்பில் கவனம் வைத்துச் செயல்பட்டால் வாழ்வில் உய்வு பெறலாம் என்பதை உணர்த்து.
* மனமெனும் பெண்ணே! நான் சொல்வதைக் கேட்டால் பல்லாண்டு வாழலாம். உன் உயர்வுக்கான நல்ல முயற்சிகளில் ஈடுபட்டு கண் போல என்றும் உன்னைக் காத்து நிற்பேன்.
* பூட்டைத் திறக்கும் சாவி போல, நல்ல அறிவால் மனம் என்னும் வீட்டைத் திறந்து விட்டோம். அதில் சத்தியத்தை குடியமர்த்துவோம்.
* மனதில் உறுதி நிலைக்கட்டும். வாக்கில் இனிமை கலந்திருக்கட்டும். எண்ணத்தில் தூய்மை விளங்கட்டும். விரும்பிய கனவெல்லாம் நனவாகட்டும்.
* உண்மை எங்கும் ஓங்கட்டும். அறிவுக்கண் திறக்கட்டும். செய்யும் செயலில் ஆர்வம் பெருகட்டும். பூமியில் உள்ள உயிர்கள் எல்லாம் பயனுள்ள வாழ்வு பெறட்டும்.
- பாரதியார்

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement