பலன் தரும் தெய்வத்தன்மை
ஜூன் 19,2012,
11:06  IST
எழுத்தின் அளவு:

* பணத்தாசை பிடித்தவர்கள் ஆசைத்தூண்டுதல்களிலும், சூழ்ச்சி வலைகளிலும் விழுகிறார்கள். பல அசட்டுத்தனமான புண்படுத்தக்கூடிய மோகங்களிலும் விழுகிறார்கள். அவை அவர்களை நரகாக்கினியல் மூழ்கடிக்கின்றன.
* நம் சரீர முயற்சியின் பலன் சிறிதளவே ஆகும். ஆனால் தெய்வீகத் தன்மையோ எல்லாவற்றையும் விட அதிகமான பலன் தருவதாகும்.
* நேர்மையாளனுக்கு இருட்டிலும் வெளிச்சம் உதிக்கும்.
* நெருக்கடியான நேரத்தில் தளர்வாயாகில் உன் பலம் சிறிதாகிவிடும். பெண்களிடத்தில் உன் பலத்தைக் கொடுத்துவிடாதே.
* முட்டாளுக்கு அவனது புத்தியீனத்திற்கு ஏற்ப பதில் சொல். பதில் சொல்லாவிட்டால் அவன் தன்னை அறிவாளி என்று நம்பிக் கொண்டிருப்பான்.
* தானியத்தைப் பதுக்கி வைப்பவனைப் பொதுஜனம் சபிக்கும். ஆனால், அதை விற்பவனை வாழ்த்தும்.
* கடவுளின் கருணையை உன் பணத்தால் விலைக்கு வாங்கி விடலாம் என்று நீ நினைத்த படியால், உன்னுடைய பணம் உன்னுடனே அழிந்து போகட்டும்.
- பைபிள் பொன்மொழிகள்

Advertisement
பைபிள் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement