உடனே தர்மம் செய்யுங்க!
ஜூன் 22,2012,
09:06  IST
எழுத்தின் அளவு:

* பரம்பொருளைத் தவிர வேறு எதுவுமே உலகில் இல்லை என்பது தான் மேலான ஞானம். இதை அறிந்து கொள்ளவே நாம் பூமியில் பிறந்திருக்கிறோம்
* மனம் தூய்மை பெறவும், முன்வினைப் பாவம் நீங்கவும் அன்றாடம் கடவுளைத் தியானிக்க வேண்டும்.
* தியானத்தை நாம் மட்டும் செய்தால் போதாது. குடும்பத்தினரும் செய்ய வழிகாட்ட வேண்டும்.
* கறவை நின்ற மாடுகளை பாதுகாத்தால், பெற்ற தாயைப் பாதுகாத்த புண்ணியம் சேரும்.
* பணத்தை தேடி அலைபவனுக்கு தியானம் செய்வதற்கு நேரம் கிடைப்பதில்லை. தியானத்தால் நிம்மதியும், முகத்தில் ஒளியும் நிறைந்திருக்கும்.
* நாகரிகம் என்ற பெயரால் நம்முடைய தேவைகள் அதிகமாகி விட்டன. அதற்காக பணத்தைப் பற்றி மட்டுமே எப்போதும் சிந்திக்கப் பழகி விட்டோம்.
* ஒவ்வொருவரும் அவரவருடைய வருமானத்திற்கு ஏற்ப தர்மம் செய்ய வேண்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றில்லாமல் நினைத்தவுடன் செய்து விடுவது நல்லது.
- காஞ்சிப்பெரியவர்

Advertisement
காஞ்சி பெரியவர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement