வந்தால் வரட்டும் சோதனை
ஜூன் 24,2012,
14:06  IST
எழுத்தின் அளவு:

* மனிதனை சூழ்நிலை தான் உருவாக்குகிறது என நினைக்கின்றனர். ஆனால், அவனுடைய மனம் அதைவிட முக்கியமான காரணமாக இருக்கிறது.
* எல்லா ஆசைகளையும் இறைவனிடமே அர்ப்பணித்து விடுங்கள். மனச் சமநிலையுடன் இருக்க அமைதியைத் தரும் பழக்கங்களை மேற்கொள்ளுங்கள்.
* நீங்கள் நல்ல செயலைச் செய்தும் கூட உங்களை சிலர் கோபிக்கலாம். "இது தான் உலகின் இயல்பு' என்று புன்னகையுடன் ஏற்றுக் கொள்ளப் பழகுங்கள்.
* சோதனை நேர்ந்தால் வளைந்து கொடுக்காதீர்கள். எல்லாம் நன்மைக்காகவே என்று எண்ணி குறிக்கோளை நோக்கி விரைந்து செல்லுங்கள்.
* என்ன செய்தாலும் மற்றவர் நம்மைப் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டாம். உங்களுக்கு நீங்களே உற்ற நண்பனாகச் செயல்படுங்கள்.
* அறிவாளியாக இருந்தாலும், செல்வந்தராக இருந்தாலும் அவர்களது அறிவும், செல்வமும் ஏழை, எளியவர்களுக்கு பயன்படுவதாக இருக்கவேண்டும்.
- சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement