மந்திரத்தின் பலன்
டிசம்பர் 04,2007,
18:34  IST
எழுத்தின் அளவு:

ஒருவர் தனது கையில் கிடைத்த மாத்திரையை தூக்கமாத்திரை என தெரியாமல் விழுங்கி வைக்கிறார். அடித்துப்போட்டாற்போல் தூங்கிவிடுகிறார். மந்திரத்தின் அர்த்தத்தை அறியாமல் நீங்கள் உச்சரித்தாலும், அதற்குரிய பலன் இருக்கவே செய்யும். மந்திரத்தை சிரத்தையோடும், அன்போடும் உச்சரிக்க வேண்டும். தீவிர கவனம் இருப்பதும் அவசியம்.

நீங்கள் ரயிலிலோ, பஸ்சிலோ பயணம் செய்கிறீர்கள். வண்டியை யார் ஓட்டிச்செல்கிறார் என்று தெரியாவிட்டாலும், சேரவேண்டிய இடத்திற்கு போய் சேர்ந்துவிடுகிறீர்கள். ரயில் கட்டும் தொழிற்சாலை எங்கிருக்கிறது, பஸ்சுக்கான உதிரிபாகங்கள் எங்கே கிடைக்கும் என்பதெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டியதில்லை. நீங்கள் இறங்கிச்செல்லும் ரயில்நிலையம் அல்லது பஸ் நிலையத்திலிருந்து சிறிது தொலைவில் உங்கள் வீடு இருக்கிறது. மந்திரம் உண்மையை அறியும் முயற்சியில் உங்களை இட்டுச்செல்லும். அங்கிருந்து முடிவான குறிக்கோளை நீங்கள் அடைவது எளிது.

தயிரை உற்பத்தி செய்ய இயற்கையில் ஒரு வழி இருக்கிறது. புளிப்பான ஒரு பொருளை பாலில் சேர்த்தால் போதும். 24 மணி நேரத்தில் பால் சுத்த தயிராகிவிடும். சீடனுக்கு உபதேசம் செய்விக்கிறபோது, குருவானவர் அவனுள் உறங்கிக்கிடக்கும் ஆற்றலை எழுப்பிவிடுகிறார். அதற்கு தன்னுடைய ஆற்றலில் சிறிதளவே அவனுக்கு வழங்குகிறார். உறைமோரைப் போல அவர் செயல்படுகிறார். ஒரு செடியைப் பிடுங்கி இன்னொரு இடத்தில் நடுவதுபோல, அவர் இகலோக சுகத்தில் திளைக்கிற மனதைப் பறித்து ஆன்மிக உலகில் இடம்பெறச் செய்கிறார்.

Advertisement
மாதா அமிர்தனந்தமயி ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement