நல்ல மருந்து எது?
பிப்ரவரி 27,2009,
16:56  IST
எழுத்தின் அளவு:

மற்ற செல்வங்களை எல்லாம் பறிகொடுக்க நேர்ந்தாலும் பெரிதில்லை. அவற்றை நாம் மீண்டும் தயாரித்து விடலாம். ஆனால், அவ்வைப் பிராட்டியின் நூல்களை ஒரு போதும் இழந்து விடக்கூடாது. ஏனெனில், அவை மீண்டும் பெற முடியாத பெரும் செல்வமாகும்."படைத்தவன் காப்பான்' என்று சொல்லி வாழ்க்கையின் எல்லாவிதமான பொறுப்புகளையும் அவனுடைய திருவடியில் சமர்ப்பணம் செய்து கர்ம பந்தமின்றி விடுதலை பெறுவதே முக்தி நிலையாகும்.* கொலை, கொள்ளை போன்ற பாதகங்களை அன்பினாலும், தர்மத்தாலும் தான் மாற்ற முடியும். இவை தான் கடைசி வரை கைகூடி வரக்கூடிய மருந்து. மற்றவை எல்லாம் போலி மருந்துகள்.*  மனிதன் செய்யும் தீங்குகளில் மாமிச உணவு உண்பது மிகவும் இழிவான செயல் என்று என் புத்திக்கு தெளிவாகப் படுகிறது. மனிதர் அத்தனை பேருக்கும் போதுமான உணவை பூமாதேவி கொடுப்பாள். வீட்டிலும், வெளியிலும், தனிமையிலும், எங்கும், எப்போதும் நேர்மையாயிருக்க வேண்டும். உண்மையாய் இருக்க வேண்டும். உண்மை இறைவனின் கண்ணாடி. அதனால், எல்லா விஷயங்களிலும் உண்மை நிலவும் படி நடக்க வேண்டும்

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement