மத விரோதம் கூடாது
பிப்ரவரி 28,2009,
11:14  IST
எழுத்தின் அளவு:

* தனக்கேனும் பிறருக்கேனும் துன்பம் விளைவிக்கத்தக்க ஒரு செயலைச் செய்தால், அது பாவம். தனக்கும், பிறருக்கும் இன்பம் தரும் செயல்களைச் செய்தால் புண்ணியம். பாவ, புண்ணியங்களுக்கு ஏற்பவே அடுத்த ஜென்மத்தில் உயர்ந்த பிறப்பும், தாழ்ந்த பிறப்பும் கிடைக்கும் என்பது நமது தேசத்திலுள்ள பொதுவான நம்பிக்கை.
* பாவம் செய்யும் ஒருவனை அடுத்த ஜென்மத்தில் நீ மிருகமாகப் பிறப்பாய் என்றால், அவனுடைய மனம் பதைக்கிறது. ஆனால், இந்த ஜென்மத்திலேயே மனிதன் மிருகம் போலத்தான் இருக்கிறான். அதுபற்றி அவன் கவலைப்படுவதே கிடையாது.
* மனிதன் பாவத்தை விட்டால் அமரத்தன்மையை அடையலாம். பாவத்தின் சம்பளம் மரணம் என்று கிறிஸ்தவ வேதம் சொல்கிறது.
* பயத்தை வென்றால், பாவத்தை வென்றுவிடலாம். ஏதேனும் ஒரு பாவத்தை வெல்லும் முயற்சியில் ஒரு மனிதன் மிகவும் கஷ்டப்பட்டு தேறிவிடுவான் என்றால், பிறகு மற்ற பாவங்களை வெல்வது அவனுக்கு அத்தனை கஷ்டமாக இருக்காது .
* பிறவி காரணமாக உயர்வு, தாழ்வு கொள்ளும் எண்ணம் கூடாது. மதபேதங்கள் இருக்கலாம். ஆனால், மத விரோதங்கள் இருக்கக்கூ-டாது. இந்த உணர்வே நமக்கு சுதந்திரத்தையும், அமரத்தன்மையையும் கொடுக்கும்.

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement