கவலை தீர்க்கும் மருந்து
ஜூலை 09,2012,
16:07  IST
எழுத்தின் அளவு:

* உணவைத் தேடி மனிதன் அலைவது கூடாது. கடவுளைத் தேடிக் கண்டடையமனிதன் பிறவி எடுத்திருக்கிறான்.
* அன்பு வழியில் கடவுளை நோக்கி ஆழ்ந்த பக்தியில் ஈடுபடுங்கள். பக்தியே கவலையைத் தீர்க்கும் மருந்து.
* தனக்காக பிரார்த்தனை செய்வதைக் காட்டிலும் பிறர் நலத்திற்காகச் செய்வதே உயர்ந்த பிரார்த்தனை.
* சர்வ வல்லமை நிறைந்த கடவுளைக் காணவே கண்கள் தரப்பட்டுள்ளன.
* வேகத்தைக் காட்டிலும் விவேகத்துடன் சரியான இலக்கை நோக்கி மனிதன் பயணம் செய்ய வேண்டும்.
* எப்போதும் மனசாட்சி சொல்வதைக் கேட்டு செயல்படுங்கள். நல்ல எஜமானனாகவும், வழி காட்டியாகவும் துணைநிற்பது அதுவே.
* அன்பு, ஒழுக்கம், ஜீவகாருண்யம் ஆகிய நல்ல குணங்களைக் கொண்டவன் மனமே கடவுளின் இருப்பிடமாகும்.
* கல்லிலே கடவுளைக் காணவேண்டுமே ஒழிய கடவுளைக் கல்லாக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது.
- சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement