Advertisement
நமக்கு ஐந்து அம்மா!
மார்ச் 05,2009,
17:06  IST

* ஏழைக்கு உணவளித்தல், சிறைக்கைதிகள், பார்வையற்றோர், மனநோய் மருத்துவமனையில் உள்ளவர்கள், காதுகேளாதோர், பேசும் திறனற்றவர்கள் ஆகியோருக்காக தொண்டாற்றுங்கள்.
* ஒவ்வொரு குழந்தைக்கும் ஐந்து அன்னையர் உண்டு. அவர்கள், உடலுக்கு பிறப்பளித்த தேகமாதா, பால் தரும் கோமாதா, ஒன்றுக்கு நூறாக விளைவிக்கும் பூமாதா, வாழ்கின்ற சொந்த தேசமாதா, ஆன்மிகச் செல்வம் தரும் வேதமாதா ஆகியோர்.
* மனிதவாழ்வு தீயில் பிறந்து, தீயில் வளர்ந்து, தீயிலேயே முடிகிறது. அன்னையின் கதகதப்பான கருவில் பிறந்து ஜீரணமண்டலத் தீயால் காப்பாற்றப்பட்டு, முடிவாக மரணச்சிதையில் முடிகிறது. இப்படி அக்னியே மானிடப் பிறப்புக்குக் காரணமாய் அமைகிறது.
* அன்பின் ஊற்று இல்லையென்றால், பூஜை, வழிபாடு போன்ற கருவிகளைக் கொண்டு உள்ளத்தில் பள்ளம் தோண்டுங்கள். அன்பு பெருக்கெடுக்கும்.
* நம்பிக்கை பல அற்புதங்களைச் செய்ய வல்லது. மனதை சந்தேகம் கொள்ளாமல் அலைபாய விடாமல் நம்பிக்கையில் உறுதி கொள்ளுங்கள். சூரியன் தலைக்கு நேராக இருக்கும் போது, நிழல் கீழே விழாதது போல, நம்பிக்கையில் உறுதியுடன் நின்றால் சந்தேக நிழல் விழுவதில்லை.

சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
Advertisement