ஆனந்தம் இருக்கும் இடம்
மார்ச் 15,2009,
18:06  IST
எழுத்தின் அளவு:

* பானையில் ஓட்டை இருந்தால் அதில் தண்ணீர் நிரப்ப முடியாது. அதுபோல, மனமாகிய பானையில் ஆசை என்னும் ஓட்டை விழுந்தால் எண்ணங்கள் சிதறத் தொடங்கி விடும்.
* உடல் இன்பமே கதி என இன்பங்களை நாடி ஓடுபவர்கள், உண்மையான லட்சியத்தை அறியாமல் வாழ்பவர்கள் ஆவார்கள்.
* தர்மத்தையும், அர்த்தத்தையும் ஒன்றாக பார்க்க வேண்டும். காமத்தையும், மோட்சத்தையும் ஒன்று சேர்க்க வேண்டும். அதாவது, செல்வத்தை அறவழியில் சேர்க்கவும், செலவழிக்கவும் வேண்டும். ஆசையை விடுத்து மோட்சம் பெற வேண்டும் என்பது இதன் பொருள்.
* தொடக்கத்தில் கறையான் சிறிதாகவே தோன்றும். காலப்போக்கில் அவை பெருகி, மரக்கட்டையையே அரித்துவிடும். அதுபோல தீய குணங்கள் சிறிது சிறிதாக ஆரம்பித்து நாளடைவில் ஒரு மனிதனை முழுவதுமாக அழித்துவிடும்.
* அன்பு உள்ள இடத்தில் தான் ஆனந்தம் இருக்கும். உண்மை, தியாகம், அமைதி முதலிய நற்குணங்களும் அன்பு இருக்கும் இடத்தோடு தொடர்பு கொள்ளும். அன்பு இல்லாதவனுக்கு எந்த இடத்திலும் பாதுகாப்பு என்பதே கிடையாது.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement