வாயடக்கம் மிகமிக அவசியம்
மார்ச் 26,2009,
17:14  IST
எழுத்தின் அளவு:

தொண்டாற்றும் போது, உங்களைப் பற்றிய தற்பெருமையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். அடக்கத்தை மேற்கொள்ளுங்கள். தொண்டாற்ற வாய்ப்பளித்த இறைவனைச் சிந்தியுங்கள். பூமிப்பந்து எப்போதும் ஒரு பாதி இருட்டாகவும், மறுபாதி ஒளியாகவும் இருந்து நமக்கு அரிய பாடத்தை புகட்டி வருகிறது. இவ்வரிய உண்மையைக் கண்டும் நம் வாழ்வு என்றும் நிரந்தரம் என்று நம்புவது ஏனென்று புரியவில்லை. நம் வாழ்வு நிலையில்லாதது. தோன்றுவதும், மறைவதுமாக இருப்பது என்பதை உணர வேண்டும். சாத்வீகமான உணவை உண்டு, தூயநீரைப் பருகி மனதை தூய்மையாக வைத்திருந்தால் தெய்வீக உணர்வைப் பெறலாம். இளமையிலிருந்தே நல்லபழக்கங்களை மேற்கொண்டால் அன்றி தெய்வீகத்தைப் பெற இயலாது. உடலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து விடுவது நம் லட்சியத்தை அறிந்து கொள்வதை அழித்துவிடும் . அதனால், உடலுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட்டு, உள்ளத்தை உயர்த்தும் செயல்களில் ஈடுபடுங்கள். வாயைக் கட்டுப்படுத்தி, அதிகம் உண்ணாமல், சொல்லக் கூடாத சொற்களை விலக்கினால் நம் உடல் நலம் பெருகும். மனம் அமைதி பெறும்.

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement