Advertisement
தர்மம் நீதி நிலைக்கட்டும்
ஜூலை 31,2012,
11:07  IST

*உலகைப் படைத்துக் காக்கின்ற மகாசக்தியே! நாங்கள் செய்யும் செயல் யாவும் வெற்றி பெற நல்லருள் தா.
* நிலம்,நீர், தீ,காற்று, ஆகாயம் ஆகிய ஐந்திலும் உள்ளிருந்து இயக்கும் பராசக்தியே! வேதம் போற்றும் வித்தகியே! மனிதகுலம் மேன்மை பெறச் செய்ய அருள்புரிவாயே.
* எதற்காகவும் மனம் வருந்தக்கூடாது. வருத்தத்தால் எந்தப் பயனும் விளையப் போவதில்லை. நாம் வேண்டுமென்றே இந்த பூமியில் பிறக்கவும் இல்லை. அதுபோல் வாழ்வின் முடிவும் நம் வசத்தில் இல்லை. எனவே, பராசக்தியின் மலரடியை சரணடைந்து விடு.
* எந்தக் காலத்திலும் நன்னெறியைப் பின்பற்றும் உறுதியை எனக்குக் கொடு. "ஓம் சக்தி' என்று ஜெபிப்போருக்கு வேண்டிய வரம் அனைத்தும் அருள் செய். இந்த மண்ணுயிர் எல்லாம் பசியும், நோயும் இல்லாத நல்வாழ்வு பெற வழிகாட்டு.
* எங்கும் நிறைந்தவளே! எந்நாளும் உன் பெருமைகளைப் போற்றி மகிழும் மனநிலையைக் கொடு. உலகெங்கும் தர்மம், நீதி, நியாயம் நிலைக்க அருள் செய்.
- பாரதியார்

பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement