கடவுள் அளித்த பரிசு
ஆகஸ்ட் 05,2012,
10:08  IST
எழுத்தின் அளவு:

* பெற்றோர்கள் நல்ல பண்புகளைக் கடைபிடித்து குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும்.
* இளைஞர்கள் எக்காரணம் கொண்டும் சோம்பித் திரிவது கூடாது. இளமைக்காலம் மிக அரிய பருவம். அதில் ஒவ்வொரு கணப்பொழுதும் கடவுள் அளித்த பரிசு.
* துயரத்தில் சிக்கித் தவிப்பவர்களுக்கு சேவை செய்வது நம் கடமை. அவர்களுக்குச் செய்யும் தொண்டினை கடவுள் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்.
* அன்றாட வாழ்வை எளிமையாக்கிக் கொள்ளுங்கள். ஆடம்பரத்தில் சிறிதும் நாட்டம் செலுத்தாதீர்கள்.
* இந்த உலகம் உங்களுடைய சேவகனாக இருக்க விரும்பினால், நீங்கள் அழிவின் பாதையில் இழுத்துச் செல்லப்படுகிறீர்கள் என்பது பொருள்.
* உங்களுடைய கண்களில் தெய்வ அம்சம் நிறைந்துஇருக்கட்டும். அப்போது அனைத்தையும் தெய்வீகமாகக் காணும் மனத் தெளிவு உண்டாகும்.
* சோதனைகளை வரவேற்கக் கற்றுக் கொள்ளுங்கள். அதுவே ஒருவருக்கு தன்னம்பிக்கையை அளித்து வளர்ச்சிக்கு துணை நிற்கிறது.
- சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement