கூட்டாக சேர்ந்து வாழுங்கள்
ஆகஸ்ட் 05,2012,
10:08  IST
எழுத்தின் அளவு:

* வாங்கும்போதும், விற்கும்போதும் சாந்தகுணத்தைக் கடைபிடிப்போர் மீது இறைவனின் கருணை உண்டாகட்டும்.
* குடும்பத்தைக் காப்பாற்ற உழைத்துப் பொருள் சம்பாதிப்பவர்கள் மறுமையில் ஒளி நிறைந்த முகத்துடன் விளங்குவார்கள்.
* பாவங்களைச் செய்வதற்கு தூண்டுகோலாக இருப்பது பேராசையே. பேராசையை விட்டும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
* ஒருவர் செய்த உதவிக்கு கைமாறு செய்வது அவசியம். அவ்வாறு செய்ய முடியாவிட்டால் உதவி செய்தவரைப் புகழ்ந்து கொண்டே இருக்கவேண்டும்.
* பெருஞ்செல்வந்தனாக வேண்டும் என்று பேராசை கொள்ளாதீர்கள். அது உங்களை நேர்மையை விட்டும் தூரமாக்கிவிடும்.
* உலகம் ஒரு பாலம். அதைக் கடந்து செல்ல முயற்சி செய்யுங்கள். அந்த பாலத்திலேயே கட்டடம் கட்டித் தங்குவதற்குச் சிந்தனை செய்யாதீர்கள்.
* கூட்டாக சேர்ந்து வாழுங்கள். பிரிந்து செல்லாதீர்கள். சொர்க்கத்தை விரும்புபவர்கள் ஒற்றுமையை கடை பிடியுங்கள்.
- நபிகள் நாயகம்

Advertisement
குரான் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement