இடைவிடா முயற்சி தேவை
ஆகஸ்ட் 10,2012,
09:08  IST
எழுத்தின் அளவு:

* உழைப்பில் தான் சுகம் இருக்கிறது என்ற உண்மையை உணர்ந்து கொண்டவர்கள் உழைக்கத் தயங்கமாட்டார்கள். உழைப்பை உயிரெனக் கொள்ளுங்கள்.
* கல்வி கற்கவும், ஆன்மிக வாழ்வில் ஈடுபடவும் வயது வரம்பு கிடையாது. ஆர்வமிருந்தால் எந்த பருவத்திலும் மேற்கொள்ளலாம்.
* மதிப்புடன் வாழ்பவனுக்கு நேரும் அவமானம் மரணதண்டனையை விடக் கொடியது.
* நீதிநெறி தவறாமல் பிறருக்கு உதவ நினைப்பவர் உயர்ந்தவர். மற்றவர் எல்லாம் தாழ்ந்தவர். இந்த இரு பாகுபாட்டைத் தவிர உலகில் வேறு பாகுபாடும் கிடையாது.
* கோபம் மனதைச் சூழ்ந்து கொண்டால், மனிதன் அறிவின் வழியில் செல்ல முடியாது.
* அச்சத்தினால் அன்பை விளைவிக்க முடியாது. அன்பினால் தான் அன்பை உருவாக்க முடியும்.
* சத்தியம் ஒன்று. அதனை ஆராதிக்கும் வழிமுறைகள் ஆயிரமாயிரம் உலகில் இருக்கின்றன.
* தெளிந்த அறிவும், இடைவிடாத முயற்சியும் ஒருவனுக்கு இருந்து விட்டால் அவனால் அடைய முடியாத குறிக்கோள் என்று எதுவுமில்லை.
- பாரதியார்

Advertisement
பாரதியார் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement