இதோ! "அந்த' சொல்
ஆகஸ்ட் 10,2012,
09:08  IST
எழுத்தின் அளவு:

* முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடமும் நம்பிக்கை இருந்தாலும், உங்களிடத்தில் நம்பிக்கை இல்லாவிட்டால் பயனில்லை.
* நீங்கள் அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள். மண்ணுலகத்தின் தெய்வங்கள். அழியாத திருவருளைப் பெற்ற நீங்கள், செம்மறி ஆடுகளைப் போல் திரியவேண்டாம்.
* ஓராயிரம் முறை உங்கள் லட்சியத்தைக் கைக்கொள்ளுங்கள். ஆயிரம்முறை தோல்வியுற்றாலும் மீண்டும் ஒருமுறை முயற்சி செய்யுங்கள். போராட்டங்களையும், தவறுகளையும் பொருட்படுத்தாமல் லட்சியத்தை நோக்கி நடைபோடுங்கள்.
* அறியாமைக்குவியல் மீது வெடிகுண்டைப் போல வெடிக்கும் சொல் எது என்றால் "அஞ்சாமை' என்பது தான். வேத வேதாந்தங்களின் சாரமெல்லாம் அந்த ஒரு சொல்லிலேயே அடங்கி இருக்கிறது. உபநிஷதங்களும் இதையே சொல்கிறது. வலிமையே வாழ்விற்கு மகிழ்ச்சியையும், நிரந்தரமான வளத்தையும் தரும்.
- விவேகானந்தர்

Advertisement
விவேகானந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement