இன்றே தொடங்குங்கள்
ஆகஸ்ட் 10,2012,
09:08  IST
எழுத்தின் அளவு:

* இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த கருவியாக இருப்பதை விட, உயர்ந்த பெருமையும், புகழும் வேறில்லை.
* உத்தமமான நல்ல செயல்களைச் செய்ய நினைத்தால் இன்றே இப்போதே தொடங்குங்கள்.
* இறைவன் மனிதனுக்குள்ளே இருப்பதால் தான், தெய்வீகத்தையே அவன் நம்புகிறான். தெய்வீக வாழ்வை நோக்கி முன்னேற முயல்கிறான்.
* எண்ணத்தில் தூய்மையும், சொல்லில் உண்மையும், செயலில் நேர்மையும் மனிதனுக்கு மிகவும் அவசியமானவை.
* எந்தச் சூழ்நிலையிலும் மனதுக்குள் அமைதியோடு இருப்பதே நன்மை தரும்.
* உண்மையில் சிக்கல் என்பது நமக்குள் உள்ளது. ஆனால், சுற்றுப்புறத்தில் இருப்பதாக நாம் எண்ணுகிறோம்.
* நம்முடைய குறைகளையும், தவறான செயல்களையும் ஒப்புக்கொண்டு அவற்றில் இருந்து விலக முயல்வது நன்மைக்கான வழி.
- அரவிந்தர்
(இன்று அரவிந்தர் பிறந்தநாள்)

Advertisement
ஸ்ரீ அரவிந்தர் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement