நீங்கள் தான் தலைவர்!
ஆகஸ்ட் 10,2012,
09:08  IST
எழுத்தின் அளவு:

* பெற்றோரை அன்புடனும், மரியாதை உடனும் நடத்துங்கள்.
* உங்கள் ராஜ்யத்தின் தலைவர் நீங்கள் தான். ஐம்புலன்களும், மனமும் பணியாளர்கள். நீங்கள் பிறப்பிக்கும் கட்டளைகளை செயல்படுத்த வேண்டியது அவர்களின் பொறுப்பு.
* மனம் போன போக்கில் போகாதவர், இன்பம், துன்பம் இரண்டையும் கடக்கும் வலிமை பெற்றவராகிறார்.
* சொன்ன வாக்கைக் காப்பாற்ற முடியாதவர்கள் அமைதியுடன் இருப்பது நல்லது. இல்லாவிட்டால் ஏமாற்றுக்காரர் என்ற பெயர் உண்டாகிவிடும்.
* மனிதன் தன் விதியை தன் கைகளிலேயே ஏந்திச் செல்கிறான். அவரவர் செயல்களே எதிர்கால வாழ்வின் தன்மையை நிர்ணயிக்கிறது.
* பொய் எளிதில் பலன் அளிப்பது போல தோன்றினாலும் அது நம்மை அழிவுப்பாதையில் தள்ளிவிடும்.
* எதை இழந்தாலும் மனிதன் நம்பிக்கை இழக்கக்கூடாது. நம்பிக்கை இருக்குமானால் அனைத்தும் உங்களைத் தேடி வந்து சேர்ந்து விடும்.
- சாய்பாபா

Advertisement
சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்
Advertisement
வேதங்கள் தெரிந்துகொள்ள »
Advertisement